பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை வளம், உடல் நலம் காக்கசைக்கிளை பயன்படுத்துவோம்... மாநகராட்சி கமிஷனர் பேச்சு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்;இயற்கை வளம் மற்றும் உடல் நலம் காக்கும் வகையில் சைக்கிள்களைப் பயன்படுத்துவோம் என, மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்தார்.நம் நாட்டின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பயண நிகழ்வு நேற்று நடைபெற்றது.பெண்களுக்கான பாதுகாப்பு, ஸ்மார்ட்சிட்டி வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு உள்ளிட்டவை குறித்து
 இயற்கை வளம், உடல் நலம் காக்கசைக்கிளை பயன்படுத்துவோம்... மாநகராட்சி கமிஷனர் பேச்சு

திருப்பூர்;இயற்கை வளம் மற்றும் உடல் நலம் காக்கும் வகையில் சைக்கிள்களைப் பயன்படுத்துவோம் என, மாநகராட்சி கமிஷனர் அழைப்பு விடுத்தார்.நம் நாட்டின், 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பயண நிகழ்வு நேற்று நடைபெற்றது.பெண்களுக்கான பாதுகாப்பு, ஸ்மார்ட்சிட்டி வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் பொதுமக்கள் பங்கேற்றனர்.மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கமிஷனர் கிராந்திகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். செயற்பொறியாளர் முகமது சபியுல்லா, நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் மற்றும் உதவி கமிஷனர்கள் முன்னிலை வகித்தனர்.விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இனி ஒரு விதி செய்வோம் அமைப்பு சார்பில், பெண் துாய்மை பணியாளர்கள் 50 பேருக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.முன்னதாக, மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பேசுகையில், ''திருப்பூரை பொறுத்த வரை போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக சைக்கிள் உள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது; இயற்கை வளம் பாதுகாக்கப்படும்.உடல் நலனுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வுக்காகவும் சைக்கிள் பயணம் அமைந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X