பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர் மழை :பள்ளிகளுக்கு விடுமுறை

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:தொடர் மழை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை நேற்று அறிவிக்கப்பட்டது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உட்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன் தினம் இரவு முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் நீர் தேங்கி

திருப்பூர்:தொடர் மழை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை நேற்று அறிவிக்கப்பட்டது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உட்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன் தினம் இரவு முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் நீர் தேங்கி கிடக்கின்றன. இதனால், பள்ளி வந்து செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.தொடர்ந்து, 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், நேற்று மதியம் திடீரென அனைத்து பள்ளிக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.பள்ளிக்கு வருகை புரிந்த ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், அனைத்து தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மதியம், 12:30 மணியளவில் வீடு திரும்பினர். சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால், திங்களன்று (4ம் தேதி) பள்ளி செயல்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X