பொது செய்தி

தமிழ்நாடு

தரமில்லா பொருள் விற்பனை: தாராளமாக புகார் அளிக்கலாம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:குடிமக்கள் நுகர்வோர் சங்கம் மற்றும் கல்லுாரி முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், 'நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு' குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப்வரவேற்றார். மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் முருகன் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்.உணவு பாதுகாப்புத்துறை
 தரமில்லா பொருள் விற்பனை: தாராளமாக புகார் அளிக்கலாம்

திருப்பூர்:குடிமக்கள் நுகர்வோர் சங்கம் மற்றும் கல்லுாரி முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், 'நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு' குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப்வரவேற்றார். மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் முருகன் நுகர்வோர் விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்.உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர். விஜய லலிதாம்பிகை, 'உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு பொருள் வாங்கும்போது நுகர்வோர் கவனிக்கப்பட வேண்டியவை, உணவு பொருட்களில் உள்ள கலப் படத்தை அறிவதற்கான வழிமுறைகளையும் விளக்கினார்.தரம் குறைவான பொருட்கள் பற்றிய புகார்களுக்கு, 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அறிவுறுத்தினார். மூத்த நுகர்வோர் செயற்பாட்டாளர் சிந்து, நுகர்வோர் பாதுகாப்பு பற்றியும், கொரோனா விழிப்புணர்வு குறித்தும் எடுத்துரைத்தார்.முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர் வசந்தி நன்றி கூறினார். இணை பேராசிரியர் அருள்மொழி கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X