பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் ஜப்தி, ஏல நடவடிக்கை தறிகளின் எண்ணிக்கை குறைகிறது :கூட்டமைப்பு நிர்வாகி வேதனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
பல்லடம்;ஜப்தி, ஏல நடவடிக்கைகள் காரணமாக, திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. தினசரி ஒரு கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழில் நலிவடைந்து வருவதன் காரணமாக, விசைத்தறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இது குறித்து

பல்லடம்;ஜப்தி, ஏல நடவடிக்கைகள் காரணமாக, திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. தினசரி ஒரு கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழில் நலிவடைந்து வருவதன் காரணமாக, விசைத்தறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு, மாவட்டங்களில்தான் விசைத்தறிகள் அதிகம் உள்ளன. பெரும்பாலும், கூலி அடிப்படையில் நெசவு செய்யப்படுகிறது.கடந்த காலங்களில், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும், 2.50 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இருந்தன.ஆட்டோமேட்டிக் தறிகளின் வருகையால், சிலர் அதற்கு மாறினர். சிறிய அளவில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள், தொழிலை விரிவுபடுத்த வங்கி கடன் பெற்றனர். இதற்கிடையில், 2014ல் கூலி உயர்வு பிரச்னை எழுந்தது.இன்றுவரை கூலி உயர்வு கிடைக்காததால், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பலர் கடனாளி ஆகினர். ஜப்தி, ஏல நடவடிக்கைகளால், தறிகளை பழைய இரும்புக்கு விற்று கடன் செலுத்திய பலர், மாற்று தொழில், வேலைக்கு சென்று விட்டனர்.இந்த பிரச்னைகளால், விசைத்தறிகளின் எண்ணிக்கை, 2 லட்சத்துக்கும் குறைந்துள்ளன. மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், தொழில் வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே, மீதியுள்ள தறிகளையும், தொழிலையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X