தமிழ்நாடு

ஒசைரி நூல் விலை உயரவில்லை: பின்னலாடை உற்பத்தியாளர் நிம்மதி!

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:இம்மாதம் நுால் விலை உயர்த்தப்படாததால், பண்டிகை கால ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் மகிழ்ச்சி பரவியுள்ளது.ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என, வரும் ஜன., வரை, தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருகின்றன. இதையடுத்து, திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு,
 ஒசைரி நூல் விலை உயரவில்லை: பின்னலாடை உற்பத்தியாளர் நிம்மதி!

திருப்பூர்:இம்மாதம் நுால் விலை உயர்த்தப்படாததால், பண்டிகை கால ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் மகிழ்ச்சி பரவியுள்ளது.ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என, வரும் ஜன., வரை, தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வருகின்றன.

இதையடுத்து, திருப்பூர் உள்நாட்டுக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, வெளிமாநிலங்களிலிருந்தும்; ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.கொரோனாவால் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும்வகையில், ஆர்டர்களை பெற்று ஆடை தயாரிப்பதில் நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சீசன் காலங்களில், பிரதான மூலப்பொருளான நுால் விலை உயர்ந்து, பின்னலாடை துறையினருக்கு நெருக்கடி கொடுப்பது வழக்கம்.

நுாற்பாலைகளை பொருத்தவரை, பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு, மாதம்தோறும் 1ம் தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன.அவ்வகையில், கடந்த 2020 நவ., முதல் 2021 ஏப்., வரை, தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை உயர்த்தியது. இருப்பினும், கடந்த ஐந்து மாதங்களாக, நுாற்பாலைகள், நுால் விலையை ஒரே சீராக தொடர்கின்றன.

இம்மாத ஒசைரி நுால் விலை நேற்று வெளியிடப்பட்டது. நுால் விலை உயர்வு இல்லை; பழைய விலையே தொடரும் என, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன. இது, பண்டிகை கால ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுால் விலை விவரம்20ம் நம்பர் கோம்டு ரக நுால் (வரி நீங்கலாக) 254 ரூபாய்; 24ம் நம்பர், 264 ரூபாய்; 30ம் நம்பர் நுால், 274 ரூபாய்; 34ம் நம்பர், 294 ரூபாய்; 40ம் நம்பர், 314 ரூபாய். 20ம் நம்பர் செமிகோம்டு ரக நுால், 244 ரூபாய்; 24ம் நம்பர், 254; 30ம் நம்பர், 264; 34ம் நம்பர், 284; 40ம் நம்பர், 304 ரூபாய்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X