சுதந்திர தின ஓட்டம்: 110 பேர் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தின ஓட்டம்: 110 பேர் பதிவு

Added : அக் 02, 2021
Share
திருப்பூர்:இன்று நடக்கும் சுதந்திர தின விழா ஓட்டத்தில் பங்கேற்க, மாணவர், பொது நல அமைப்பினர் என, 110 பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு, 'பிட்' இந்தியா, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சுதந்திர தின விழா ஓட்டம் இன்று நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை இரண்டு கி.மீ.,க்கு போட்டி

திருப்பூர்:இன்று நடக்கும் சுதந்திர தின விழா ஓட்டத்தில் பங்கேற்க, மாணவர், பொது நல அமைப்பினர் என, 110 பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு, 'பிட்' இந்தியா, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சுதந்திர தின விழா ஓட்டம் இன்று நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை இரண்டு கி.மீ.,க்கு போட்டி நடக்கிறது.போட்டியில் பங்கேற்க, பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று வரை கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொது நல அமைப்பினர் என, 110 பேர் ஓட்டத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X