இன்றைய கிராம சபாவில் தண்ணி காட்ட போறாங்க!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய கிராம சபாவில் 'தண்ணி' காட்ட போறாங்க!

Added : அக் 02, 2021
Share
அவிநாசி:அவிநாசி ஒன்றிய பகுதிகளில் இன்று நடக்கும் கிராம சபா கூட்டத்தில், குடிநீர் பிரச்னை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக கொண்டு, அன்னுார் துவங்கி அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் என, பல இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஆரம்ப நாட்களில், வாரம் ஒருமுறை வினியோகிக்கப்பட்ட

அவிநாசி:அவிநாசி ஒன்றிய பகுதிகளில் இன்று நடக்கும் கிராம சபா கூட்டத்தில், குடிநீர் பிரச்னை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக கொண்டு, அன்னுார் துவங்கி அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள், சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் என, பல இடங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஆரம்ப நாட்களில், வாரம் ஒருமுறை வினியோகிக்கப்பட்ட குடிநீர், தற்போது மாதம் இருமுறை என்ற நிலைக்கு வந்துள்ளது. தண்ணீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடால், நகர மற்றும் கிராமப்புற மக்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம், கிராமப்புற கூட்டு குடிநீர் திட்டம் என, பல திட்டங்களின் கீழ் தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும். பற்றாக்குறையே நிலவுகிறது.இன்று, கிராம ஊராட்சிகளில் நடக்கிற கிராம சபை கூட்டங்களில், தண்ணீர் பிரச்னை தான் பிரதானமாக ஒலிக்க போகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X