பொது செய்தி

தமிழ்நாடு

மெஹந்தியில் காந்திய சிந்தனை; கல்லுாரி மாணவியர் அசத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்கள் 108 பேர், உலக அமைதியை வலியுறுத்தி, தங்கள் கைகளில் மெஹந்தி தீட்டியுள்ளனர்.இன்று காந்தி பிறந்தநாள். அவர் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், உலக அமைதியை வலியுறுத்தியும், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி பேஷன் மாணவ, மாணவியர் தங்கள் கைகளில் மெகா மெஹந்தி ஓவியத்தை தீட்டியுள்ளனர்.உப்பு சத்தியா கிரக
 மெஹந்தியில் காந்திய சிந்தனை; கல்லுாரி மாணவியர் அசத்தல்

திருப்பூர்:காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்கள் 108 பேர், உலக அமைதியை வலியுறுத்தி, தங்கள் கைகளில் மெஹந்தி தீட்டியுள்ளனர்.இன்று காந்தி பிறந்தநாள். அவர் பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், உலக அமைதியை வலியுறுத்தியும், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி பேஷன் மாணவ, மாணவியர் தங்கள் கைகளில் மெகா மெஹந்தி ஓவியத்தை தீட்டியுள்ளனர்.உப்பு சத்தியா கிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் உட்பட போராட்டம், காந்தியின் எளிமை, அஹிம்சா வழி போராட்டங்களை சித்தரிக்கும் ஓவியங்கள், காந்தியின் வாழ்க்கை வரலாறு, ராட்டையின் மகத்துவம், காந்திய வழியில் மத்திய அரசு முன்னெடுத்து செல்லும் துாய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் ஓவியங்கள் என, கைகளில் பொறித்துள்ளனர்.மொத்தம், 52 வகையான மெஹந்தி ஓவியங்களை, 108 மாணவ, மாணவியர், தங்கள் கைகளில் அச்சு வார்த்தார்போல் பதித்துள்ளனர். மாணவியரின் இந்த புதுமையான முயற்சியை, கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X