பொது செய்தி

தமிழ்நாடு

தங்க நகைகள் ஒரிஜினல் தானா? உரசிப்பார்க்கிறது ஆய்வுக்குழு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழக அரசு நியமித்த ஆய்வுக்குழுவினர், நகை மதிப்பீட்டு பணியாளருடன் சென்று, கூட்டுறவு சங்கத்தில் உள்ள நகை களின் தரம் மற்றும் எடையை சரிபார்க்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பிறமாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் குழு,

திருப்பூர்:தமிழக அரசு நியமித்த ஆய்வுக்குழுவினர், நகை மதிப்பீட்டு பணியாளருடன் சென்று, கூட்டுறவு சங்கத்தில் உள்ள நகை களின் தரம் மற்றும் எடையை சரிபார்க்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, பிறமாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள் குழு, ஆய்வு மேற்கொண்டுள்ளது.முதல் கட்டமாக, ஒவ்வொரு நகைக்கடனுக்காக பெற்று வைத்துள்ள தங்க நகையில் தரம் மற்றும் எடை சரிபார்ப்பு பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, கூட்டுறவு கடன் சங்கங்களில், நகைக்கடன் வழங்கியது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை நடந்த ஆய்வுகளில், பிற மாவட்டங்களில் உள்ளது போல், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.முதல்கட்டமாக, சங்கத்தில் இருப்பது, ஒரிஜினல் தங்க நகையா, குறிப்பிட்ட அளவு எடை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. நகை மதிப்பீட்டு பணியாளருடன் சென்று, கூட்டுறவு சங்கம் வாரியாக ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பிறகுதான், மற்ற விவரங்கள் குறித்த ஆய்வு நடக்கும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X