பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்;வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், 28 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் முதல், வேலை வாய்ப்பு முகாம் மீண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று, தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு
 தனியார் துறையில்  வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர்;வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், 28 பேருக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், இம்மாதம் முதல், வேலை வாய்ப்பு முகாம் மீண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று, தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளரை தேர்வு செய்ய, நேர்காணல் நடத்தினர். இளைஞர்கள், இளம்பெண்கள், நேர்காணலில் பங்கேற்று, தகுதிக்கு ஏற்ற தனியார் வேலை வாய்ப்பை பெற்றனர்.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று மட்டும், 75 பேர் பங்கேற்றனர்; அவர்களில், 28 பேருக்கு, உடனடியாக பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.தனியார் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறுவதன் மூலம், அரசு வேலை வாய்ப்பு பதிவு ரத்தாகாது. முகாமிற்கு வரும் பதிவுதாரர், இதர வேலை வாய்ப்பு அலுவலக சேவைகளையும் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X