பொது செய்தி

தமிழ்நாடு

தம்பு பள்ளி ஆண்டு விழா: முன்னாள் மாணவர்கள் ஆஜர்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தம்பு மேல்நிலைப்பள்ளியில், 52வது ஆண்டு விழா, நடந்தது.தம்பு கல்வி நிலையங்களின் தாளாளர் சித்ரா சம்பத்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்று, பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார். மழலையர் பள்ளியின் ஆண்டு அறிக்கையை, அப்பள்ளியின் முதல்வர் வாணி வாசித்தார்.கல்வியாளர் ஜெகதீசன் பேசுகையில், ''மாணவர்களை

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தம்பு மேல்நிலைப்பள்ளியில், 52வது ஆண்டு விழா, நடந்தது.தம்பு கல்வி நிலையங்களின் தாளாளர் சித்ரா சம்பத்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்று, பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார். மழலையர் பள்ளியின் ஆண்டு அறிக்கையை, அப்பள்ளியின் முதல்வர் வாணி வாசித்தார்.கல்வியாளர் ஜெகதீசன் பேசுகையில், ''மாணவர்களை நல்வழிப்படுத்துவதில், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தினர் என, நால்வரின் பங்கு மிகவும் அவசியம்,'' என்றார்.தம்பு மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ராஜ்மோகன், மழலையர் பள்ளியின் செயலாளர் அபர்ணா கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கவிஞர் புவியரசு, ப்ளூ மவுண்ட் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சம்பத்குமார், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் உட்பட பலர் பலர் இணைய வழியில் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X