பொது செய்தி

தமிழ்நாடு

பெ.நா.பாளையம் ஒன்றியம் கிராம சபை கூட்டம் விபரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 கிராம ஊராட்சிகளில், 8 ஊராட்சிகளில் இன்று காலை, 10:00 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டம், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. அரசு பார்வையாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலா கலந்து கொள்கிறார்.பிளிச்சி ஊராட்சி மன்ற

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 9 கிராம ஊராட்சிகளில், 8 ஊராட்சிகளில் இன்று காலை, 10:00 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டம், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடக்கிறது. அரசு பார்வையாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலா கலந்து கொள்கிறார்.பிளிச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், அரசு பார்வையாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி, சின்னதடாகம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜேந்திரன், அரசு பார்வையாளராக கலந்து கொள்கிறார்.நாயக்கன்பாளையம், ராயரூத்பதி சமுதாயக்கூடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் அனிதா, பன்னிமடை, தாளியூர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில், ஒன்றிய மேற்பார்வையாளர் சாந்தி, அரசு பார்வையாளராக பங்கேற்கின்றனர்.சோமையம்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, வீரபாண்டி, ஆனைகட்டி கே.கே. நகர் சமுதாய கூட வளாகத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அழகர்ராஜா, அரசு பார்வையாளராக பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X