பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் குரல் எழுப்ப எம்.எல்.ஏ., 'ரெடி!' நிலம் கையகப்படுத்தும் விவகாரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
அன்னுார்;''விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, சட்டசபையில் குரல் கொடுப்போம்,'' என, எம்.எல்.ஏ., அருண்குமார் தெரிவித்தார்.அன்னுார் தாலுகாவில், நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இரண்டு ஊராட்சிகள் என ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பளவில், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தமிழக அரசின் 'டிட்கோ' சார்பில், தொழிற்பேட்டை அமைக்க ஆய்வு நடந்து

அன்னுார்;''விவசாய நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, சட்டசபையில் குரல் கொடுப்போம்,'' என, எம்.எல்.ஏ., அருண்குமார் தெரிவித்தார்.அன்னுார் தாலுகாவில், நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இரண்டு ஊராட்சிகள் என ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கர் பரப்பளவில், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தமிழக அரசின் 'டிட்கோ' சார்பில், தொழிற்பேட்டை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான நில ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், தொழில் பேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், நேற்று முன்தினம் இரவு, அக்கரை செங்கப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார் பங்கேற்றார். அவரிடம், விவசாயிகள் கூறுகையில், 'தொழில்பேட்டையால் இப்பகுதியைச் சேர்ந்த, 30 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். சுற்றுப்புறத்தில் உள்ள மேலும், 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவர். எனவே, இங்கு தொழில்பேட்டை அமைக்கக்கூடாது' என்றனர். எம்.எல்.ஏ., அருண்குமார் பேசியதாவது:விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி, அங்கு தொழில்பேட்டை அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்கு உணவளிக்க, விவசாய நிலம் தான் முக்கியம். தொழிற்பேட்டை அமைக்க வேறு இடங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அரசு, இங்கு தொழில்பேட்டை அமைப்பது சரியல்ல. இதுகுறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்து, அறிக்கை வெளியிடச் செய்வேன். மேலும் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, சட்டசபையில் குரல் கொடுப்போம். இப்பகுதி விவசாயிகள், மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு, அ.தி.மு.க., உறுதுணையாக நிற்கும்.இவ்வாறு, அவர் கூறினார். ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, ஊராட்சி தலைவர்கள் ராஜ்குமார், சிவகாமி, ரஞ்சிதம் உள்பட பலர் பங்கேற்றனர்.வீடுகளில் கறுப்பு கொடி ஆறு ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, விவசாயிகள் நில மீட்பு போராட்டக் குழு அமைத்துள்ளனர். ஒரு கிராமத்துக்கு இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்கரை செங்கப்பள்ளியில் நடந்த கூட்டத்தில், 'ஆறு ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்புதான் பிரதான தொழிலாக இருக்கிறது. இங்கு, 95 சதவீதம் விவசாயிகள், ஒரு ஏக்கர் மற்றும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டும் வைத்து அதை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களிடமிருந்து நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்துவதன் வாயிலாக வாழ்வாதாரமே பறிபோகும். வாழ்க்கை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவர்.எனவே, இங்கு தொழில்பேட்டை அமைக்கக்கூடாது. தமிழக அரசு இங்கு தொழில்பேட்டை அமைக்கும் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து, இன்று ஆறு ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகள், தோட்டங்கள் மற்றும் வாகனங்களில் கறுப்புக் கொடி ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.அடுத்த கட்டப் போராட்டம் வரும், 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் நடத்தப்படும் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X