'மினி கிளினிக்'குகள் திட்டத்துக்கு மூடுவிழா? அப்போ அவ்வளவு தானா...! தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப் போனது

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
பெ.நா.பாளையம்;கடந்த ஆட்சியின் போது, தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்புற மக்களுக்காக துவக்கப்பட்ட, அம்மா 'மினி கிளினிக்'குகள் திட்டம் முடங்கியுள்ளன. இந்த ஆட்சியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், 'மினி கிளினிக்'குகள் திட்டம் உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகம் தான் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம்
'மினி கிளினிக்'குகள் திட்டத்துக்கு மூடுவிழா? அப்போ அவ்வளவு தானா...! தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப் போனது

பெ.நா.பாளையம்;கடந்த ஆட்சியின் போது, தமிழகத்தில் கிராமம் மற்றும் நகர்புற மக்களுக்காக துவக்கப்பட்ட, அம்மா 'மினி கிளினிக்'குகள் திட்டம் முடங்கியுள்ளன. இந்த ஆட்சியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், 'மினி கிளினிக்'குகள் திட்டம் உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகம் தான் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஏழை, எளிய மக்கள், குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், தரமான மருத்துவ சேவையை இலவசமாக பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு, அம்மா 'மினி கிளினிக்'குகள் திட்டம் தொடங்கப்பட்டது.தமிழகம் முழுவதும், 2,000ம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என, அரசு அறிவித்து, அனைத்து மாவட்டங்களிலும், அடுத்தடுத்து தொடங்கப்பட்டன. இதில், 7,000ம் முதல், 10 ஆயிரம் வரை மக்கள்தொகை உள்ள பகுதிகள், 3 கி.மீ., தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகள், குடிசைகள் அதிகளவு உள்ள பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தொடங்கப்பட்டன. மேலும், பழங்குடியின மக்கள், பஸ் வசதி இல்லாத கிராமங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில், திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.உடல் நலத்தில் சிறு பிரச்னைகளுக்காக, அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்து, மினி கிளினிக் வாயிலாக உடல் நலம் பெறலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு பல்நோக்கு மருத்துவப் பணியாளர் இடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக மாநிலம் முழுவதும், மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.திடீரென ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதால், சொந்த கட்டடம் அமைக்கப்படாமல், அரசு அலுவலகங்கள், ஊராட்சி கட்டடங்கள், சமுதாய நலக் கூடங்கள், துணை சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.

நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் காலை, 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை, மகப்பேறு பரிசோதனை உட்பட சிகிச்சைகளும், முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன.பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றிருந்த இத்திட்டம், கோவிட் இரண்டாவது அலை, ஆட்சி மாற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் மினி கிளினிக்குகள் திறக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், மினி கிளினிக்குகள் திட்டம் உயிர்ப்புடன் இருக்குமா என்பது சந்தேகம் தான் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சுகாதார துறையினர் கூறுகையில், 'பெரும்பாலான துணை சுகாதார நிலையங்களில், மினி கிளினிக்குகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், அவசர, அவசரமாக துவக்கப்பட்டன.மேலும், தற்போதுள்ள துணை சுகாதார நிலையங்களில், போதிய மருந்துகளை அரசு வினியோகம் செய்து, வரும் நோயாளிகளை கவனிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்தாலே போதும்; குறிப்பிட்ட கிராம மக்களுடைய, மருத்துவ தேவைகளை நிறைவு செய்ய முடியும். மினி கிளினிக் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா அல்லது நடக்காதா என்பது அரசின் கையில் தான் உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202111:43:59 IST Report Abuse
அப்புசாமி அம்மா கிளினிக்குகள் அரசியல் நோக்கோடு, ஓட்டுக்களை ஆட்டயப்போட ஆரம்பிக்கப் பட்டவை. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட்வை. ஒரு நோயாளிக்கு 10 ரூவாயாச்சும் கட்டணம் வசூலிச்சிருந்தா இன்னிக்கி அவை அரசு நடத்தலேன்னாலும் தாங்களே கால் ஊன்றி நிற்க வாய்ப்பு உண்டு. எல்லாத்தையும் விதி 110 இல்லே ஏதாவது ஒரு புண்ணாக்கு கணக்கில் எழுதி நஷ்டத்திலே ஓடிச்சுன்னா இழுத்து மூடுவதே உத்தமம். அம்மா குளினிக்குனு சொல்லி எத்தனை கோடி அடிச்சான்களோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X