பொது செய்தி

தமிழ்நாடு

நேந்திரன் வாழை விலை சரிவு; கையை கடிக்குது வருவாய்

Added : அக் 02, 2021
Share
Advertisement
அன்னுார்:நேந்திரன் கொள்முதல் விலை சரிவால், விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், 5,000ம் ஏக்கர் பரப்பளவில், நேந்திரன் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்களில், 90 சதவீதம், கேரளா மற்றும் மும்பைக்கு அனுப்பப்படுகிறது.சில வாரங்களாக நேந்திரன் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வந்தது. தற்போது ஒரு கிலோ, 14 ரூபாய்க்கு மட்டுமே,

அன்னுார்:நேந்திரன் கொள்முதல் விலை சரிவால், விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், 5,000ம் ஏக்கர் பரப்பளவில், நேந்திரன் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்களில், 90 சதவீதம், கேரளா மற்றும் மும்பைக்கு அனுப்பப்படுகிறது.சில வாரங்களாக நேந்திரன் கொள்முதல் விலை குறைந்து கொண்டே வந்தது. தற்போது ஒரு கிலோ, 14 ரூபாய்க்கு மட்டுமே, வியாபாரிகள், தோட்டத்தில் வாங்குகின்றனர். பொன்னே கவுண்டன்புதுார் விவசாயிகள் கூறியதாவது:வாழைக் கன்று விலை அதிகரித்து விட்டது. குழி தோண்டி நடவு செய்ய, நான்கு முறை களை எடுக்க, இரண்டு முறை உரம் வைக்க, பூச்சி மருந்து அடிக்க, நீர் பாய்ச்ச என, 11 மாதங்களில், ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. அதுவே குவிண்டால் ரகமாக இருந்தால், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. 11 மாதங்கள் பாடுபட்டு, சூறாவளி காற்றில் இருந்து தப்பித்து, பிழைக்கும் வாழைத்தார்களை வெட்டுகிறோம்.ஆனால் வியாபாரிகள் ஒரு கிலோ, 14 ரூபாய்க்கு மட்டுமே வாழைத்தார்களை வாங்குகின்றனர். அதுவும் தண்டுக்கு ஒன்றரை கிலோ கழித்து விடுகின்றனர். விற்றால் ஒரு ஏக்கர் முழுவதும் சேர்ந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் கூட கிடைப்பதில்லை.அடுத்த முறை வாழை பயிரிடுவதா, வேண்டாமா என்கிற யோசனைக்கு வந்துள்ளோம். அரசு, வாழைக்கு நிலையான, கட்டுபடியாகும் விலை கிடைக்க, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X