பொது செய்தி

தமிழ்நாடு

'தே.மு.தி.க., தனி முத்திரை பதிக்கும்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுாரில், தே.மு.தி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.தே.மு.தி.க., சார்பில், கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு குருந்தாசலம் போட்டியிடுகிறார். இதற்கான அறிமுக கூட்டம் அன்னுாரில் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவராமன் பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் அதிகளவில் ஒன்றியக் கவுன்சிலர் வார்டுகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது, அன்னுார்

அன்னுார்:அன்னுாரில், தே.மு.தி.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.தே.மு.தி.க., சார்பில், கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு குருந்தாசலம் போட்டியிடுகிறார். இதற்கான அறிமுக கூட்டம் அன்னுாரில் நடந்தது.மாவட்ட செயலாளர் சிவராமன் பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் அதிகளவில் ஒன்றியக் கவுன்சிலர் வார்டுகளில், தே.மு.தி.க., வெற்றி பெற்றது, அன்னுார் ஒன்றியத்தில் தான். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. பல ஊராட்சிகளில், தே.மு.தி.க.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க., தனி முத்திரை பதிக்கும்,'' என்றார்.ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் ரங்கராஜ், நகரச் செயலாளர் விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 15 ஊராட்சிகளிலும், வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்வது என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X