பொது செய்தி

தமிழ்நாடு

பண்டிகை சீசனில் உயரும் தேங்காய் விலை! வீழ்ச்சியில் இருந்து மீள்வதால் மகிழ்ச்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
நெகமம்;கொரோனா தொற்று பரவல் குறைவு எதிரொலியாக, ஓட்டல், கல்லுாரி மற்றும் பள்ளிகள் பரவலாக திறக்கப்பட்டுள்ளதோடு, இம்மாதம் திருவிழாக்கள் அதிகமாக இருப்பதாலும் தேங்காய், கொப்பரை விலை மெல்ல உயரத்துவங்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில், வியாபாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் முடங்கிப்போனது. இதில்,தேங்காய்

நெகமம்;கொரோனா தொற்று பரவல் குறைவு எதிரொலியாக, ஓட்டல், கல்லுாரி மற்றும் பள்ளிகள் பரவலாக திறக்கப்பட்டுள்ளதோடு, இம்மாதம் திருவிழாக்கள் அதிகமாக இருப்பதாலும் தேங்காய், கொப்பரை விலை மெல்ல உயரத்துவங்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில், வியாபாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் முடங்கிப்போனது. இதில்,தேங்காய் வியாபாரமும், கொப்பரை உற்பத்தி மற்றும் விற்பனையும் தப்பவில்லை.கடந்த ஒரு மாத காலமாக, தொற்று பரவல் படிப்படியாக குறையத்துவங்கியது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விவசாயிகள், தேங்கியிருந்த தேங்காய் மற்றும் கொப்பரையை, விலை சரிந்த நிலையிலும் விற்பனை செய்துவிட்டனர். மீண்டும், கொப்பரை உற்பத்தி துவங்கியுள்ளது.தற்போது, தேங்காய், கொப்பரை மார்க்கெட் நிலவரப்படி, சராசரியாக, ஸ்பெஷல் கொப்பரை கிலோ - 101 ரூபாய்க்கும், சாதா கொப்பரை - 98 ரூபாய்க்கும் விற்றது. 15 கிலோ ஆயில் - 2,230 ரூபாய், பவுடர் - 165, கருப்பு ரக தேங்காய் டன் - 31 ஆயிரத்து, 500, பச்சை ரக தேங்காய் - 29 ஆயிரத்து, 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.இது குறித்து, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேல் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, தோப்புகளில் தேங்கிக்கிடந்த தேங்காய் விலை சரியாமல் இருந்தது. இருப்பினும் கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால், கருப்பு தேங்காய்கள் பல இடங்களில் முளைப்பு விட்டது. கொப்பரை விலையும் வெகுவாக சரிந்ததால், உற்பத்தி நிறுத்தப்பட்டது.தற்போதைய நிலையில், விலை வீழ்ச்சி மெல்ல மீண்டு வருகிறது. ஓட்டல்கள் தொழிற்சாலைகள் திறந்துள்ளன. வடமாநிலங்களுக்கு தேங்காய், கொப்பரை அனுப்பப்படுகிறது. எதிர்வரும் நாட்களில், பள்ளி, கல்லுாரிகள் திறக்கும்போது, தேங்காய்க்கு கிராக்கி ஏற்படும். இம்மாதத்தில், தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், தேங்காய், கொப்பரைக்கு வரவேற்பு இருக்கும்; அதனால், விலையும் உயரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X