பொது செய்தி

தமிழ்நாடு

கல்லார் பழங்குடியினர் நோட்டீஸ் வினியோகம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
வால்பாறை:கல்லார் பழங்குடியின மக்கள், வால்பாறை நகரில் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, நோட்டீஸ் வழங்கினர்.வால்பாறை, கல்லார் பழங்குடியின மக்கள் மற்றும் ஆனைமலை தொடர் பழங்குடியின மக்கள் வால்பாறையில், மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.அதில் கூறியிருப்பதாவது:கல்லார் செட்டில்மென்ட்டில், 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த, 2018ல் பெய்த
 கல்லார் பழங்குடியினர் நோட்டீஸ் வினியோகம்

வால்பாறை:கல்லார் பழங்குடியின மக்கள், வால்பாறை நகரில் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, நோட்டீஸ் வழங்கினர்.வால்பாறை, கல்லார் பழங்குடியின மக்கள் மற்றும் ஆனைமலை தொடர் பழங்குடியின மக்கள் வால்பாறையில், மக்களுக்கு நோட்டீஸ் வழங்கி, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.அதில் கூறியிருப்பதாவது:கல்லார் செட்டில்மென்ட்டில், 23 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். கடந்த, 2018ல் பெய்த கனமழைக்கு, வீடுகள் அனைத்தும் மண்ணில் புதைந்தன. இதனால், பழங்குடியின மக்களான நாங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறோம்.இந்நிலையில்,தற்போது தற்காலிகமாக தாய்முடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் தங்கியுள்ளோம். மாற்று இடமான தாய்முடி தெப்பக்குள மேட்டுப்பகுதியில் வீடு கட்ட இடம் வழங்காததை கண்டித்து, இன்று (அக்., 2) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X