சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பதிவெண் காரில் மதுபாட்டில் கடத்தல்: உளுந்தூர்பேட்டையில் 4 பேர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-போலி பதிவெண் காரில் மதுபாட்டில் கடத்திய இருவர் மற்றும் மது பாட்டில்களை வேனில் மாற்றி எடுத்துச் செல்ல வந்த இருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., திருமேனி (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன

உளுந்துார்பேட்டை-போலி பதிவெண் காரில் மதுபாட்டில் கடத்திய இருவர் மற்றும் மது பாட்டில்களை வேனில் மாற்றி எடுத்துச் செல்ல வந்த இருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., திருமேனி (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற டிஎன்.19 ஏபி 2412 என்ற பதிவெண் போர்டு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 28 பெட்டிகளில் 1,344 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது.விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த கோபால் மகன் அய்யப்பன், 30; அமலதாஸ் மகன் அந்துவான் பிரகாஷ், 33; என்பதும், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க கடத்திச் சென்றது தெரியவந்தது.மேலும், புதுச்சேரி மாநில பதிவெண் வாகனமாக இருந்தால், போலீசார் சோதனை செய்வர் என்பதற்காக, தமிழ்நாடு பதிவெண்ணை போலியாக பொருத்தி மதுபாட்டில்களை கடத்திச் சென்றுள்ளனர். காரின் உண்மையான பதிவெண் பி.ஒய் 01 ஏஎம் 6292 ஆகும்.இதற்கிடையே மது பாட்டில்களை இந்த வாகனத்தில் இருந்து வேறு வாகனத்தில் மாற்றி எடுத்துச் செல்வதற்காக டி.என்.15 எம் 1649 எண்ணுள்ள தோஸ்த் மினி வேனைக் கொண்டு வந்த இருவரும் சிக்கினர்.விசாரணையில், சங்கராபுரம் அடுத்த நெடுமானுாரைச் சேர்ந்த சரவணன் மகன் மணிமாறன், 34; முனுசாமி மகன் ராஜ்குமார், 31; என தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து மது பாட்டில்கள் கடத்தி வந்த கார், அதனை மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட மினி வேன் மற்றும் 1,344 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X