பா.ம.க., மாஜி சேர்மன் அலுவலகம் கார்கள், லாரி கண்ணாடி உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., 'மாஜி' சேர்மன் அலுவலகம் கார்கள், லாரி கண்ணாடி உடைப்பு

Added : அக் 02, 2021
Share
செஞ்சி-பா.ம.க., முன்னாள் சேர்மன் அலுவலகம் மற்றும் கார்களை அடித்து உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; வல்லம் ஒன்றிய பா.ம.க., முன்னாள் சேர்மன். அரசு ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான அலுவலகம் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் உள்ளது.காண்ட்ராக்ட் வேலைகளை மூத்த மகன் ஆனந்தராஜ் 37; கவனித்து

செஞ்சி-பா.ம.க., முன்னாள் சேர்மன் அலுவலகம் மற்றும் கார்களை அடித்து உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கல்லடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; வல்லம் ஒன்றிய பா.ம.க., முன்னாள் சேர்மன். அரசு ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான அலுவலகம் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் உள்ளது.காண்ட்ராக்ட் வேலைகளை மூத்த மகன் ஆனந்தராஜ் 37; கவனித்து வருகிறார். இவருக்கும் வந்தவாசியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சக்திவேல், 42; என்பவருக்கும் இடம் விற்பனை செய்ததில், கமிஷன் பிரச்னை உள்ளது.நேற்று முன்தினம் சக்திவேல் மற்றும் சிலர் நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஆனந்தராஜ் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.இதையடுத்து அன்று மாலை 3 கார்களில் வந்த சக்திவேல் ஆதரவாளர்கள் ஆனந்தராஜின் அலுவலகம், 'ஜாகுவார்', 'இன்னோவா' கார்கள் மற்றும் லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், சக்திவேல், ஆனந்தராஜ், உட்பட 19 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே முன்னாள் சேர்மன் ஏழுமலை, டி.எஸ்.பி., இளங்கோவனை சந்தித்து தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X