சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரில் கடத்தியதாக மாணவன் நாடகம்: பெண்ணாடத்தில் பரபரப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடத்தில் தன்னை காரில் கடத்திச் சென்றதாக, பிளஸ் 2 மாணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 48; சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுபாஷிணி, 40; இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் அரியலுார் மாவட்டம், தளவாய் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.

பெண்ணாடம்-பெண்ணாடத்தில் தன்னை காரில் கடத்திச் சென்றதாக, பிளஸ் 2 மாணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 48; சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுபாஷிணி, 40; இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் அரியலுார் மாவட்டம், தளவாய் அருகே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். நேற்று காலை 5:30 மணியளவில் மகன் மகேஸ்வரன், தனது நண்பரிடம் புத்தகம் வாங்க சென்றார். பல மணி நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த தாய் மாணவனின் நண்பர்களிடம் விசாரித்தார். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை என்றனர்.பிற்பகல் 12:00 மணியளவில் சுபாஷிணியின் மொபைலுக்கு அழைப்பு வந்தது. அதில், மாணவன் மகேஸ்வரன் பேசினார். அப்போது, தன்னை, திருவள்ளுவர் தெரு, தனியார் பால் விற்பனை நிலையம் அருகே அடையாளம் தெரியாத காரில் வந்த மர்ம நபர்கள் முகத்தில் பவுடர் துாவி, கடத்திச் சென்றனர். தற்போது, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வடுகபாளையம் பெட்ரோல் பங்க் அருகே பெட்டிக் கடையிலிருந்து பேசுவதாக தாயிடம் கூறினார். இதையடுத்து பகல் 1:00 மணியளவில் வடுகப்பாளையத்தில் நின்றிருந்த மகேஸ்வரனை உறவினர்கள் உதவியுடன் மீட்டு, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்து, கடத்தல் குறித்து புகார் தெரிவித்தனர்.விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மாணவனிடம் விசாரித்தனர். வரும் 4ம் தேதி காலாண்டு தேர்வு துவங்க உள்ளதால் தாய் சுபாஷிணி படிக்குமாறு கூறினார். படிப்பதற்கு பயந்து, காலை 5:30 மணியளவில் நண்பனிடம் புத்தகம் வாங்க செல்வதாக சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்றேன். பகல் 12:00 மணியளவில் சைக்கிள் ஓட்ட முடியாமல், அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வடுகப்பாளையத்தில் உள்ள பெட்டிக்கடையில் இருந்த ஒருவரிடம் மொபைல்போன் வாங்கி, கடத்தியதாக கூறினேன்' என்றார். பின் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X