விழுப்புரத்திற்கு கடத்த முயன்ற 1,920 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியலுார் அருகே தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற 1,920 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் எழில்ராஜா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில் தில்லை நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது மாருதி

வில்லியனுார்-வில்லியலுார் அருகே தமிழகத்திற்கு காரில் கடத்த முயன்ற 1,920 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் எழில்ராஜா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில் தில்லை நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது மாருதி எஸ்டீம் கார் ஒன்று தில்லை நகர், வாட்டர் டேங்க் பகுதியில் வந்து நின்றது. காரை போலீசார் சோதனை செய்தனர். அதில், 40 அட்டை பெட்டிகளில் 1,920 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது. காரில் இருந்த நபரை விசாரித்தனர்.அவர், பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன், 35, என்பதும், உள்ளாட்சி தேர்தலுக்காக புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, விழுப்புரம் மாவட்டத்திற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.இது தொடர்பாக வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து கதிரவனை கைது செய்தனர். மேலும், மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X