டாஸ்மாக் மேலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மேலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

Added : அக் 02, 2021
Share
விழுப்புரம்-லஞ்சம் கேட்டதாக விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில், நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, செஞ்சி அடுத்த வி.நயம்பாடியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் 'சஸ்பெண்ட்'

விழுப்புரம்-லஞ்சம் கேட்டதாக விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில், நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, செஞ்சி அடுத்த வி.நயம்பாடியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாகவும், தனக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.இதையடுத்து, மேற்பார்வையாளரிடம் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், லஞ்சம் கேட்டதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X