சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் கிளைச் சிறை உதவியாளர் 'சஸ்பெண்ட்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டிவனம் கிளைச் சிறை உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரைச் சேர்ந்தவர் முருகன், 42; திண்டிவனம் கிளைச் சிறை உதவியாளர். இவர், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு நேர்முக உதவியாளர் என தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார்.மேலும், கடலுார் மாவட்டம்,

விழுப்புரம்-மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டிவனம் கிளைச் சிறை உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரைச் சேர்ந்தவர் முருகன், 42; திண்டிவனம் கிளைச் சிறை உதவியாளர். இவர், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு நேர்முக உதவியாளர் என தனக்கு தெரிந்தவர்களிடம் கூறியுள்ளார்.மேலும், கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த வேலாயுதம், சரோஜாவிடம் டிரைவராக உள்ளார். அவரிடம் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக தனது அண்ணன் லோகநாதனுடன் சேர்ந்து 52 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், முருகன் உட்பட 3 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்தனர்.இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கையாக முருகனை 'சஸ்பெண்ட்' செய்து, கடலுார் சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X