வேலூர் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி தனியார் ஓட்டலில் தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடி, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வீதி, லல்லி தொலந்தர் வீதி சந்திப்பில் உள்ள தனியார் விடுதி உள்ளது. இங்கு அறை எடுத்து தங்கியிருந்த ஜோடி துாக்கில் தொங்குவதாக பெரியக்கடை போலீசாருக்கு, விடுதி மேலாளர் தகவல் தெரிவித்தார்.போலீசார், கதவை உடைத்து பார்த்தனர்.

புதுச்சேரி-புதுச்சேரி தனியார் ஓட்டலில் தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடி, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வீதி, லல்லி தொலந்தர் வீதி சந்திப்பில் உள்ள தனியார் விடுதி உள்ளது. இங்கு அறை எடுத்து தங்கியிருந்த ஜோடி துாக்கில் தொங்குவதாக பெரியக்கடை போலீசாருக்கு, விடுதி மேலாளர் தகவல் தெரிவித்தார்.போலீசார், கதவை உடைத்து பார்த்தனர். படுக்கை அறை மின் விசிறியில், புடவையால் துாக்கில் பிணமாக தொங்கிய இரு உடல்களையும் கைப்பற்றினர். அவர்கள் வேலுார் மாவட்டம், கருகாம்புத்துார், புதுத்தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ், 22; அதே ஊர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி நந்தினி, 27; என்பது தெரியவந்தது. நந்தினிக்கு இரு குழந்தைகள் உள்ளன.மோகன்ராஜ், நந்தினி சில மாதங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இவர்களது கள்ளத்தொடர்பை கணவர் கார்த்திக் கண்டித்துள்ளார்.இருவரும் நேற்று முன்தினம் வேலுாரில் இருந்து பைக்கில் புறப்பட்டு, காட்பாடி ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கு பைக்கை நிறுத்திவிட்டு, ரயில் மூலம் சென்னை சென்றனர்., அங்கிருந்து பஸ்சில் நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு புதுச்சேரி வந்தனர்.புதுச்சேரி மணக்குள விநாயகர் வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். புதுச்சேரியைச் சுற்றிப் பார்த்து விட்டு இரவு அறைக்கு வந்த இருவரும் நேற்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.சந்தேகப்பட்டு விடுதி மேலாளர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, இருவரும் துாக்கில் தொங்கியது தெரியவந்தது. நந்தினி, தாலி செயினை கழற்றி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X