வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை: காரைக்காலில் காதல் கணவர், மாமியார் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
காரைக்கால்-காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த 6 மாத கர்ப்பிணி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் வினோதா, 22; தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த காரைக்கால், நேரு நகர் பகுதியை சேர்ந்த பாரத், 27, என்பவரும்

காரைக்கால்-காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த 6 மாத கர்ப்பிணி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் வினோதா, 22; தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்த காரைக்கால், நேரு நகர் பகுதியை சேர்ந்த பாரத், 27, என்பவரும் காதலித்தனர்.பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2018ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாரத் அவரது தாய் ஜோதி, வினோதா ஆகியோர் ஒன்றாக வசித்தனர்.சில மாதமாக பாரத் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அவர், அவரது தாய் ஜோதி, சகோதரி பரிமளா ஆகியோர் வரதட்சணை கேட்டு, வினோதாவை சித்ரவதை செய்துள்ளனர்.நடந்த விபரத்தை அவரது பெற்றோரிடம் வினோதா கூறியுள்ளார். அவரது பெற்றோர் வினோதாவுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி, கொடுத்துள்ளார்.வினோதா 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். இரு தினங்களுக்கு முன்பு வினோதாவை பாரத், ஜோதி, பரிமளா ஆகியோர் பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.மனமுடைந்த வினோதா நேற்று முன்தினம் நள்ளிரவு படுக்கையறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வினோதாவின் தந்தை வெங்கடேஷ் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தாசில்தார் முத்து மற்றும் எஸ்.பி., வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, பாரத், ஜோதி ஆகியோரை கைதுசெய்தனர். பரிமளாவை தேடிவருகின்றனர். காதல் திருமணம் செய்த 6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X