சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.6.45 லட்சம் மோசடி: மதுரை வாலிபர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
விழுப்புரம்-பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி வாலிபரிடம் 6.45 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மதுரை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சண்டிசாட்சியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ், 26; இவருக்கு, மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன், 31; என்பவருடன் மொபைல் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.அப்போது, கார்த்திக்செல்வன் பங்குச்சந்தை வர்த்தகம்

விழுப்புரம்-பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி வாலிபரிடம் 6.45 லட்சம் ரூபாய் ஏமாற்றிய மதுரை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சண்டிசாட்சியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ், 26; இவருக்கு, மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன், 31; என்பவருடன் மொபைல் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டது.அப்போது, கார்த்திக்செல்வன் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார்.இதையடுத்து, சுரேஷ் தனக்கு பயிற்சி அளிக்குமாறு கூறியதால் அவரது வீட்டிற்கு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கார்த்திக்செல்வன் வந்துள்ளார். அப்போது, 5 லட்சம் கொடுத்தால் அந்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து மூன்று மாதத்தில் 15 லட்சமாக திருப்பித் தருவதாக சுரேஷிடம் கூறினார்.இதை தொடர்ந்து, பல்வேறு தவணையாக கார்த்திக்செல்வன் வங்கிக் கணக்கிற்கு, 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை சுரேஷ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, பணத்தை திருப்பிக்கொடுக்காமல் கார்த்திக்செல்வன் ஏமாற்றினார்.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திக்செல்வனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X