மகப்பேறு விடுப்பு சலுகை; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : தத்து குழந்தைகள் தொடர்பான மகப்பேறு விடுப்பு சலுகையில் உள்ள பாரபட்ச அணுகுமுறைக்கு எதிரான வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவைச் சேர்ந்த ஹம்சநந்தினி நந்துாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:மகப்பேறு பயன் சட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு

புதுடில்லி : தத்து குழந்தைகள் தொடர்பான மகப்பேறு விடுப்பு சலுகையில் உள்ள பாரபட்ச அணுகுமுறைக்கு எதிரான வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


கர்நாடகாவைச் சேர்ந்த ஹம்சநந்தினி நந்துாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:மகப்பேறு பயன் சட்டத்தின் கீழ், மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கும் பெண்களுக்கு, 12 வார விடுப்புச் சலுகை வழங்கப்படுகிறது.இது, தத்தெடுக்கும் பெண்களுக்கும், மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட, தத்து கொடுக்கப்படும் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கும் எதிரானது.


latest tamil news


பொதுவாக கர்ப்பிணியருக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடும்போது குழந்தைகளை தத்தெடுக்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் 12 வார விடுப்புச் சலுகை குறைவானது.அதிலும் இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுப்போருக்கு கிடையாது என்பது பாரபட்சமானது. எனவே மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுப்போருக்கும் மகப்பேறு பயன்கள் கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை, பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202115:02:18 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்து மகள்😊 பேரன் பேத்தி பிரசவத்துக்கு பாட்டிக்கும் பிரசவ விடுமுறை கேட்பாங்க
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
02-அக்-202111:24:55 IST Report Abuse
venkatan தாயில்லாத பச்சிளம் சிசுவை வளர்ப்பது பெற்ற குழந்தையய் வளர்ப்பதை விட கஷ்டம்.இதில் பாலினப் பாகுபாடால் விவதிப்பதை விட குழந்தை களின் வாழ்வு உரிமையை க்கவனத்தில் கொள்க.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
02-அக்-202109:01:14 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இரண்டாவது புகைப்படம் மூலம் மதமாற்றக் கொடுமை புலப்படுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X