இந்தியா

காலாவதி: பி.எட்., கல்லூரியில் மாணவர் சேர்க்கை...கூட்டுறவு துறை அதிகாரிகள் அலட்சியம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நிறுத்தி வைத்த அங்கீகாரத்தை பெற அதிகாரிகள் முயற்சிக்காத காரணத்தினால்,புதுச்சேரி கூட்டுறவு பி.எட்., கல்வியியல் கல்லுாரியில் 100 மாணவர்கள் சேர்க்கை காலாவதியானது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில், மூன்று கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகிறது. அதில் கூட்டுறவுத் துறையின் கீழ் புதுச்சேரியில் சுய்ப்பிரேன் வீதியில்
 காலாவதி: பி.எட்., கல்லூரியில் மாணவர் சேர்க்கை...கூட்டுறவு துறை அதிகாரிகள் அலட்சியம்

புதுச்சேரி-தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நிறுத்தி வைத்த அங்கீகாரத்தை பெற அதிகாரிகள் முயற்சிக்காத காரணத்தினால்,புதுச்சேரி கூட்டுறவு பி.எட்., கல்வியியல் கல்லுாரியில் 100 மாணவர்கள் சேர்க்கை காலாவதியானது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில், மூன்று கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகிறது. அதில் கூட்டுறவுத் துறையின் கீழ் புதுச்சேரியில் சுய்ப்பிரேன் வீதியில் செயல்படும் கல்வியியல் கல்லுாரி புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் என்.சி.டி. இ.,யால் அங்கீகரிக்கப்பட்டது.இக்கல்லுாரியில் கடந்த 16 ஆண்டுகளாக பயின்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இக்கல்லுாரியில் 2021-2022 கல்வி ஆண்டிற்கான பி.எட்., சேர்க்கை சென்டாக் மூலம் இதுவரை துவங்கப்படவில்லை. சென்டாக் மூலம் விண்ணப்பிக்கும் காலக் கெடு கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டது.இதுகுறித்து விசாரித்தபோது, தேசிய ஆசிரியர் கல்விக்குழும விதிகளுக்கு உட்பட்டு கல்லுாரி கட்ட டம் மற்றும் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் கல்லுாரியின் இந்த கல்வியாண்டிற்கான அங்கீகாரத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.அதேநேரத்தில், தேசிய ஆசிரியர் கல்விக்குழும விதிகளை பூர்த்தி செய்யாமல் பல தனியார் பி.எட்., கல்லுாரியில் இந்த கல்வியாண்டிற்கு அனுமதி பெற்று சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகிறது.

ஆனால், அரசின் கூட்டுறவு துறை மூலம் நடைபெறுகின்ற இந்த கல்வியியல் கல்லுாரிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது கூட்டுறவு துறை அதிகாரிகளின் காலத்தோடு எடுக்க வேண்டிய நடவடிக்கைக்களை எடுக்காத பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.இதுகுறித்து பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் மாநில முதல்வரை நேரில் சந்தித்து, கூட்டுறவு கல்வி யியல் கல்லுாரிக்கு கட்ட டம் மாற்றித் தர வலியுறுத்தியும், சேர்க்கை துவங்குவது பற்றியும் வலியுறுத்தினர்.அதனையொட்டி, முதல்வர் ரங்கசாமி, கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி கட்டடம் மாற்றி வழங்கி, தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அங்கீகாரம் பெற்றிட உத்தரவிட்டார். மேலும், மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.ஆனால், கூட்டுறவு துறை அதிகாரிகள், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் அனுமதி கிடைத்த பிறகே மாணவர் சேர்க்கை பணியை துவங்க வேண்டும் என்கின்றனர்.

இதனால், இக்கல்லுாரியில் சேர பதிவு செய்துள்ள 250 மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அதனால், உடனடியாக கல்லுாரி கட்டடத்தை மாற்றி, விரைந்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அனுமதி பெற்று, பி.எட்., சேர்க்கையை துவங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X