காந்தி சிலை நிறுவுவதில் அலட்சியம் : பொள்ளாச்சி மக்கள் அதிருப்தி

Added : அக் 02, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக, காந்தி சிலை இருந்தது. கோவை - உடுமலை - வால்பாறை -பல்லடம் - பாலக்காடு என அனைத்து முக்கிய வழித்தடங்களின் சந்திப்பின் நடுவே, பீடம் அமைத்து, காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது.பல ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில், பொதுமக்கள் மற்றும் தேச பக்தர்கள், அரசியல் அமைப்பினர் காந்தி
 காந்தி சிலை நிறுவுவதில் அலட்சியம் : பொள்ளாச்சி மக்கள் அதிருப்தி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக, காந்தி சிலை இருந்தது. கோவை - உடுமலை - வால்பாறை -பல்லடம் - பாலக்காடு என அனைத்து முக்கிய வழித்தடங்களின் சந்திப்பின் நடுவே, பீடம் அமைத்து, காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது.பல ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில், பொதுமக்கள் மற்றும் தேச பக்தர்கள், அரசியல் அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது பாரம்பரியமாக இருந்தது.இந்நிலையில், நகரில் நடக்கும் நெடுஞ்சாலைகள் விரிவாக்க பணிக்காக, காந்தி சிலை அகற்றப்பட்டு, அரசு அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.மின்கம்பங்கள் அகற்றுவதில் தாமதம், நிலம் எடுப்பில் சிக்கல் என பல்வேறு காரணங்களால், விரிவாக்க பணி நிறைவடையாமல், இழுபறியில் உள்ளது. இதனால், புகழ் பெற்ற காந்தி சிலையும், அதற்கான இடத்தில் நிறுவப்படாமல் உள்ளது.காந்தி ஜெயந்திக்குள், அகற்றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கோரிக்கை எழுப்பியிருந்தன; ஆனால், அதிகாரிகள் அதை செய்யவில்லை.இந்நிலையில், இன்று காந்தி ஜெயந்தி விழாவின் போது, பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்த, சிலை இல்லாததால், பொள்ளாச்சி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X