பொது செய்தி

இந்தியா

பல்கலைக்கழக உயரதிகாரிகள் இடமாற்றம்; துணைவேந்தர் குர்மீத் சிங் உத்தரவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகள் 9 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவியை தவிர்த்து மற்ற உயர் பதவிகள் அனைத்தும் பொறுப்புகள் அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகிறது.பல்கலையில்., பணியாற்றும் உயரதிகாரிகள் 9 பேர் அதிரடியாக பல்வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம்

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உயரதிகாரிகள் 9 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவியை தவிர்த்து மற்ற உயர் பதவிகள் அனைத்தும் பொறுப்புகள் அடிப்படையில் கவனிக்கப்பட்டு வருகிறது.பல்கலையில்., பணியாற்றும் உயரதிகாரிகள் 9 பேர் அதிரடியாக பல்வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பல்கலைக்கழக பதிவா ளர் சித்ரா, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நிதி அதிகாரி அமரேஷ் சமந்தர்யா, பல்கலைக்கழக பதிவாளராகவும், பல்கலைக்கழக தேர்வாணையர் லாசர், நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். நுாலகர் ராமய்யா, தேர்வாணையராகவும், நில அறிவியல் துறை பேராசிரியர் பிரமோத் சிங், பல்கலை., நுாலகராகவும், இயற்பியல், வேதியியல், பயன்பாட்டு அறிவியல் புல முதன்மையர் பாண்டியன் முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பசுமை ஆற்றல் தொழில்நுட்ப புல முதன்மையர் தரணிகரசு, பல்கலைக்கழக கல்வியியல் புல முதன்மையர் செல்லமணி ஆகியோர் பணியாளர் தேர்வு பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாகவும், காரைக்கால் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் அருள்முருகன், காரைக்கால் வளாக ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொறுப்புகளில் விடுவிக்கப்பட்டு, புதிய பணியிடத்தில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை துணை வேந்தர் குர்மீத் சிங் பிரப்பித்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் உயரதிகாரிகளை பொறுத்தவரை ஒன்றிரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒட்டுமொத்தமாக 9 உயரதிகாரிகள் பல்வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X