மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

Added : அக் 02, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் பயன்படுத்தவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் பயன்படுத்தவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் தலைமை தாங்கினார். துணை மாவட்ட தேர்தல் அதிகாரி கந்தசாமி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.முதல் கட்ட ஆய்விற்கு பின், தயாராக உள்ள 2,357 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மற்றும் 4,355 ஓட்டளிக்கும் இயந்திரங்கள் புதுச்சேரி மாவட்டத்திற்குட்பட்ட 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.மாகி, ஏனாம் நகராட்சிகளுக்கும் 1,680 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,080 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X