பொது செய்தி

இந்தியா

ஓட்டல்களுக்கு தர நிர்ணய சான்று

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-தர நிர்ணய சான்று இல்லாத உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை செயலர் அருண் எச்சரித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட

புதுச்சேரி-தர நிர்ணய சான்று இல்லாத உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை செயலர் அருண் எச்சரித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.உணவு பதார்த்தங்களை பொறிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தினால், அதன் நச்சுத்தன்மை 25 சதவீதம் கூடிவிடும். அவ்வாறு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மீறினால், உணவு பாதுகாப்பு துறையால் அகற்றப்படும்.எனவே, உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் நடத்து வோர், பலமுறை உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.உணவு பாதுகாப்பு துறை தரக்கட்டுப்பாடு, சட்டத்தின்படி நேற்று அக்டோபர் 1ம் தேதி முதல், உணவகங்கள் மற்றும் ஓட்டல் தொழில் செய்வோர் தங்களுடைய வணிகம் சார்ந்த ஆவணங்களில் உணவு தர நிர்ணய சான்று (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) எண் கட்டாயம் இடம் பெற வேண்டும். இப்பதிவின்றி உணவு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X