பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் 25ம் தேதி முதல் படிப்படியாக திறக்க முடிவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்படும் என, அறிவிக்கப்பட் டுள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை.ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் தொற்று

புதுச்சேரி-புதுச்சேரி பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் வரும் 25ம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்படும் என, அறிவிக்கப்பட் டுள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை.ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் தொற்று குறைந்துள்ள சூழ்நிலையில் மீண்டும் பல்கலைக்கழக நேரடி வகுப்பினை நடத்த வேண்டும். குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என, ஒரு மாதமாக பல்வேறு மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பல்கலைக் கழக நேரடி வகுப்பினை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவு:புதுச்சேரி பல்கலைக்கழக நேரடி வகுப்புகள் படிப்படியாக மீண்டும் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வரும் 25 ம்தேதி, அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்களுக்கும், மாந்தவியல் துறையின் நான்காம், ஐந்தாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.இரண்டாம் கட்டமாக நவம்பர் 15ம் தேதி முதல் மீதமுள்ள பி.எச்.டி., மாணவர்கள் பல்கலைக்கழக நேரடி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.மூன்றாம் கட்டமாக டிசம்பர் 6ம் தேதி முதல் அறிவியல், இன்ஜினியரிங், தொழில்நுட்ப படிப்பு களில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்பு நடைபெறும்.அடுத்தாண்டு ஜனவரி 17ம் தேதி முதல் சமூக அறிவியல், மாந்தவியல் படிப்புகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பில் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடக்கும்.முதலாமாண்டு ஆராய்ச்சி மாணவர்கள், மீதமுள்ள முதுநிலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X