மாணவரிடம் புளுடூத் பறிப்பு இருவருக்கு போலீஸ் வலை

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் புளூடூத் பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த மெய்யூர், மேல் கச்சிராம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர், 19; மங்களூர் மரைன் பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.இவரது உறவினர் உடல்நிலை சரியில்லாமல் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சுரேந்தர் உடன்

புதுச்சேரி-கல்லுாரி மாணவரிடம் மொபைல் போன் புளூடூத் பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த மெய்யூர், மேல் கச்சிராம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர், 19; மங்களூர் மரைன் பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.இவரது உறவினர் உடல்நிலை சரியில்லாமல் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சுரேந்தர் உடன் இருந்து கவனித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள்திடீரென சுரேந்தர் வைத்திருந்த புளுடூத் ெஹட்செட்டை வலுக்கட்டாயமாக பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். தகவல் அறிந்த டி.நகர் போலீ சார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், புளுடூத் ெஹட்செட்டை பறித்து சென்றது சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த பூபதி, 24, அவரது நண்பர் என, தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X