பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு 'சீல்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
பாகூர்-காட்டுக்குப்பத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்த, தனியார் தொழிற் சாலைக்கு, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தட்டுகள், போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம்,

பாகூர்-காட்டுக்குப்பத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்த, தனியார் தொழிற் சாலைக்கு, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தட்டுகள், போன்ற பொருட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம், இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, விற்பனை செய்யும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகூர் கொம்யூனை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத கொம்யூனாக மாற்றிட புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, இன்று (2ம் தேதி) முதல் பாகூர் கொம்யூனுக்குட்பட்ட கிராமங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை, பயன்படுத்துவற்கான தடை அமலுக்கு வருகிறது.இந்நிலையில், புதுச்சேரி சீனியர் சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் மற்றும் துறை அதிகாரிகள் நேற்று காட்டுக்குப்பம் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் கேரிபேக் உற்பத்தி செய்வது தெரியவந்தது.சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா ஒப்புதலின்படி அந்த தொழிற் சாலைக்கு 'சீல்' வைக்க, சீனியர் சுற்றுச்சூழல் பொறி யாளர் ரமேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில், மாசு கட்டுபாட்டு குழும மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் பன்னீர்செல்வம், விமல்ராஜ், சீனுவாசன், வருவாய் துறை ஆய்வாளர் முருகையன், கிராம நிர்வாக அதிகாரி அருட்பெருஞ்ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X