வருவாய் இழப்பு குறித்து விசாரணை; மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வருவாய் இழப்பு குறித்து விசாரணை; மாஜி எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
புதுச்சேரி-புதுச்சேரி அரசின் வருவாய் இழப்பினை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய தணிக்கை அறிக்கை, புதுச்சேரி அரசு தனக்கு சட்டப்படி வர வேண்டிய சொந்த வருவாயை பெறாமல் இழந்திருக்கிறது என, சுட்டிக்காட்டியுள்ளது.முதலாவது வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. 2019 - 20ம் ஆண்டில் 17 அரசு

புதுச்சேரி-புதுச்சேரி அரசின் வருவாய் இழப்பினை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, முன்னாள் எம்.பி.,ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய தணிக்கை அறிக்கை, புதுச்சேரி அரசு தனக்கு சட்டப்படி வர வேண்டிய சொந்த வருவாயை பெறாமல் இழந்திருக்கிறது என, சுட்டிக்காட்டியுள்ளது.முதலாவது வரி விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. 2019 - 20ம் ஆண்டில் 17 அரசு துறைகளில் வசூல் செய்யவேண்டியது ரூ. 1,104. 41 கோடி.வருவாய் இழப்புக்கான காரணம், இழப்பு ஏற்படாமல் இருக்க அரசு செயலர்கள் கொண்ட ஒரு குழுவினை அமைத்து விசா ரணை நடத்த வேண்டும்.அரசின் மொத்த கடன் 2019-20ம் ஆண்டு ரூ.9,449 கோடியாக இருந்தது. இதில் 75 சதவீதம், ரூ.7,086 கோடி ஏழு ஆண்டுகளில் திருப்பி தர வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி அரசு கடன் திருப்பி அளிப்பதற்காக ரூ.1,015 கோடி ஒதுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியில் புதுச்சேரி அரசின் பண கையிருப்பு அதிகமாக டெபாசிட் செய்து வைத்துள்ள நிலையில், அரசு ஏன் வெளியில் கடன் வாங்க வேண்டும்.இந்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து, எதிர்காலத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் கடமை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X