பொது செய்தி

இந்தியா

புதிய நீதிபதிகளுக்கு வரவேற்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு வரவேற்பு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது.புதுச்சேரி வக்கீல் சங்க தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர் கமலினி முன்னிலை வகித்தார். செயலாளர் தாமோதரன் வரவேற்றார்.விழாவில் புதிதாக பொறுப்பேற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், குடும்ப

புதுச்சேரி-புதுச்சேரி நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு வரவேற்பு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு வழியனுப்பு விழா நடந்தது.புதுச்சேரி வக்கீல் சங்க தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். சங்க துணை தலைவர் கமலினி முன்னிலை வகித்தார். செயலாளர் தாமோதரன் வரவேற்றார்.விழாவில் புதிதாக பொறுப்பேற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், குடும்ப நல நீதிபதி மீரா சுமதி, தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி இளவரசன், தலைமை குற்றவியல் நீதிபதி மோகன், கூடுதல் சார்பு நீதிபதி முத்துமுருகன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கிறிஸ்தியான், மூன்றாவது குற்றவியல் நீதிபதி யுவராஜா ஆகியோருக்கு சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மும்தாஜ், குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் தனலட்சுமி, சரண்யா, முதன்மை மாவட்ட உரிமையில் நீதிபதி கணேஷ் ஆகியோரின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நீதிபதிகள் சோபனாதேவி, ராபர்ட் கென்னடி ரமேஷ், தாமோதரன், ஜெயக்குமார், சிவக்குமார், பிரீத்தி, மூத்த வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, பக்தவச்சலம், ரங்கநாதன், ரங்கநாதன், நக்கீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X