பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த...போராட்டம்!பொருளாதார சேத நிலையால் விவசாயிகள் சோகம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
உடுமலை:படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, பல முறை மருந்து தெளித்தும், பலனில்லாததால், உடுமலை வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளாண்துறை வாயிலாக, மானியத்தில் மருந்துகள் வினியோகித்து, சாகுபடியை மீட்க வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள், இறவை மற்றும் மானாவாரி
  மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த...போராட்டம்!பொருளாதார சேத நிலையால் விவசாயிகள் சோகம்

உடுமலை:படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, பல முறை மருந்து தெளித்தும், பலனில்லாததால், உடுமலை வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளாண்துறை வாயிலாக, மானியத்தில் மருந்துகள் வினியோகித்து, சாகுபடியை மீட்க வலியுறுத்தியுள்ளனர்.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசன நிலங்கள், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள், இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டு, தென்மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகரித்ததோடு, மக்காச்சோளம் விலை உயர்ந்து, குவிண்டால், 2 ஆயிரம் ரூபாய் வரை விற்று வருவதால், மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.இதனால், நடப்பு பருவத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்தது.மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டு, செடிகள் வளர்ச்சி பருவத்தில் உள்ளது.செடிகளின் வளர்ச்சி தருணத்திலேயே, பெரும்பாலான பகுதிகளில் படைப்புழு தாக்குதல் துவங்கியுள்ளது. செடி, இலை, குருத்து என புழுக்கள் துவம்சம் செய்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, படைப்புழு தாக்குதலால், மக்காச்சோள சாகுபடி முற்றிலுமாக சேதமடைந்து வருகிறது. இதனால், உடுமலை பகுதிகளில் சாகுபடி குறைந்து, காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர் சாகுபடிக்கு சென்றனர். ஆனால், விளைபொருட்கள் விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், தற்போது மக்காச்சோளம் சாகுபடிக்கு திரும்பியுள்ளனர்.வேளாண் துறை, கோடை உழவு, வேப்பம்புண்ணாக்கு இடுதல் என பல வழிமுறைகளை தெரிவித்தும், பயனில்லை. துவக்க பருவத்திலேயே, அதிக பாதிப்பு உள்ளதால், பல முறை பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்க வேண்டியுள்ளது.பயிரின் வளர்ச்சி தருணத்திலேயே மூன்று கட்டமாக மருந்து தெளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள பகுதிகளில் வேளாண் துறை ஆய்வு செய்து, ஒட்டுமொத்த மருந்து தெளிக்கும் மானிய திட்டம், தொழில் நுட்ப உதவிகள் என, கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, பொருளாதார சேத நிலையை தாண்டிய பயிர்களுக்கு, அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

விரிவான ஆய்வு தேவைமக்காச்சோள செடிகளை, சூறையாடும், படைப்புழுக்களின் பரவல், கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளது. பிற நாடுகளில் இருந்து பரப்பபட்ட இப்புழு தாக்குதல் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்; நோய் பரவாத விதைகள், கட்டுப்பாட்டு முறைகள் குறித்து, வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி மையம் வாயிலாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். அடுத்து சீசனுக்குள், படைப்புழுக்களை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆயிரம் மக்காச்சோளம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X