பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் இன்னும் துவங்கவில்லை! புதிய நடைமுறையால் விவசாயிகள் கவலை

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவங்கப்பட்ட அரசு கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் துவங்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து மே, 16ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள், கோ - 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி., உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர்.தற்போது அறுவடைக்கு துவங்கியுள்ளதால், கடந்த
 நெல் கொள்முதல் இன்னும் துவங்கவில்லை! புதிய நடைமுறையால் விவசாயிகள் கவலை

ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் துவங்கப்பட்ட அரசு கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் துவங்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து மே, 16ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள், கோ - 51, ஏ.எஸ்.டி., ஏ.எல்.ஆர்.டி., உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்தனர்.தற்போது அறுவடைக்கு துவங்கியுள்ளதால், கடந்த மாதம், 22ம் தேதி ஆனைமலையில் தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. அப்போது, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, 1,958 ரூபாய், பொது ரக நெல் குவிண்டாலுக்கு, 1,918 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது.அக்., 1ம் தேதி முதல், அரசு நிர்ணயித்துள்ள புதிய விலையில் கொள்முதல் துவங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிய நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால் நேற்று கொள்முதல் துவங்கப்படாமல், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகள் டன் கணக்கில் நெல்லை குவித்து வைத்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:அரசு புதிய விலையாக, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, 2,067 ரூபாய், பொது ரக நெல் குவிண்டாலுக்கு, 2,015 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. முன்பு சிட்டா, அடங்கல் மற்றும் உரிமைச்சான்று வழங்கி விவசாயிகள், நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர்.தற்போது, அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வி.ஏ.ஓ., வேளாண் அலுவலகம் என பல இடங்களில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. புதிய நடைமுறை குறித்து, விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெளிவாக விளக்கப்படாமல், பல சிக்கல்கள் நிலவுகிறது.ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், டன் கணக்கில் நெல்லை குவித்து வைத்துள்ளோம். கொள்முதல் துவங்காத நிலையில், மழை பெய்து வருவதால், நெல் நனைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இந்த போகத்துக்கு பழைய முறைப்படி, நெல் கொள்முதல் செய்யவும், கோட்டூரில் கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் கூறுகையில், 'புதிய விலையில் நெல் கொள்முதல் செய்ய பல மாவட்டங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கொள்முதல் துவங்கப்பட்டுள்ளது. இன்னும் எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை. அறிவிப்பு வந்ததும் துவங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X