சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஊக்குவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் ஊக்குவிப்பு

Added : அக் 02, 2021
Share
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.கம்ப்யூட்டர் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிப்போர், கல்வி இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோர், குழந்தை சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.கம்ப்யூட்டர் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிப்போர், கல்வி இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்குவோர், குழந்தை சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.தற்போது, பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருப்பூர் ஜெய்ஸ்ரீராம் கல்லுாரி சார்பில் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது. அதில், உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி, வட்டார கல்வி அலுவலர் பிரிட்டோ, ஆசிரியர்கள் பழனிசாமி, பாலசுப்ரமணியம், சரவணன், நர்மதா, மெகராஜ்பாத்திமா, வள்ளிமயில், மாலதி, சையதுமுகமதுகுலாம், தனலட்சுமி ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.இதேபோல், ஏற்கனவே, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் சின்னராசு, கண்ணபிரான், வசந்தி ஆகியோருக்கும்பாராட்டுச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி கவுரவிக்கும் போது, இது எங்களுக்கு மேலும் சேவையாற்ற வேண்டும் என்ற உந்துதலை அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X