பொது செய்தி

இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு 'சீட்' காங்., உயர்மட்ட கமிட்டி அமைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சி சார்பில் போட்டியிடுபவர்களை தேர்வு செய்ய, மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் 13 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., கட்சி நிர்வாகிகளுடன் பல கட்ட ஆலோசனை நடத்தியது. இதில் காங்., கட்சியில் கூட்டணி வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் மாறுபட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டன.உள்ளாட்சி

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சி சார்பில் போட்டியிடுபவர்களை தேர்வு செய்ய, மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் 13 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்., கட்சி நிர்வாகிகளுடன் பல கட்ட ஆலோசனை நடத்தியது. இதில் காங்., கட்சியில் கூட்டணி வேண்டும் என்றும், வேண்டாம் என்றும் மாறுபட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டன.உள்ளாட்சி தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்க, மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமையில் 13 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், பெத்தபெருமாள், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ.,நீலகங்காதரன், காங்.,துணை தலைவர்கள் தேவதாஸ், தமிழரசி இடம் பெற்றுள்ளனர்.இணை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளாக விக்னேஷ், வேல்முருகன், பஞ்சகாந்தி, கல்யாணசுந்தரம், குலசேகரன், பாலாஜி, வீரமுத்து, கண்ணன், அமுதரசன் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X