பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க போலீசார் அறிவுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
நெகமம்:குற்றச்சம்பவங்களை தடுக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.கோவை புறநகர் மாவட்டத்தில், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், எஸ்.பி., செல்வநாகரத்தினம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்விளைவாக போலீசார் தீவிர வாகன

நெகமம்:குற்றச்சம்பவங்களை தடுக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.கோவை புறநகர் மாவட்டத்தில், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், எஸ்.பி., செல்வநாகரத்தினம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்விளைவாக போலீசார் தீவிர வாகன சோதனை, விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம், குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் முன்னிலையில் நடந்தது. இதில், வாடகை ஆட்டோ, வேன் டிரைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பேசுகையில், ''ஆட்டோ மற்றும் வேன்களில் அடையாளம் தெரியாத, சந்தேக நபர்கள் பயணித்தால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான இடங்களுக்கு செல்லுதல், சந்தேகப்படும்படியான பொருள்களை எடுத்து சென்றாலும் போலீசாருக்கு ரகசிய தகவல் தர வேண்டும். இப்பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க, ஆட்டோ, வேன் டிரைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.இதேபோன்ற ஆலோசனை கூட்டங்கள் வடசித்துார், ஏரிப்பட்டி மற்றும் தேவணாம்பாளையம் பகுதிகளிலும் நடந்தது. கூட்டங்களில், எஸ்.ஐ.,க்கள் மனோகரன், முகமது, காளிதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X