தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் வளர்ச்சித் திட்டம் நிறைவேறும்: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் வளர்ச்சித் திட்டம் நிறைவேறும்: அமைச்சர்

Added : அக் 02, 2021
Share
திண்டிவனம்-'தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மஸ்தான், சாரம், ஒலக்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், 'திண்டிவனத்தில் புதிய பஸ்

திண்டிவனம்-'தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேறும்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மஸ்தான், சாரம், ஒலக்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், 'திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையத்திற்காக இடம் வாங்கிக் கொடுத்தும், அ.தி.மு.க., ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பஸ் நிலையம் வரவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், திண்டிவனத்தில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.கிராமத்திற்கு நல்ல திட்டம் வரவேண்டும் என்றால் ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணிக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டும். எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால், அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் நிறைவேறும்' என்றார்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X