மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கர்ப்பிணி வந்ததால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கர்ப்பிணி வந்ததால் பரபரப்பு

Added : அக் 02, 2021
Share
விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டியைச் சேர்ந்த தமிழ்மணி மனைவி கிரிஜா, 25; இவர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தார். இதையறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் கிரிஜாவிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கூறுகையில், சென்னை பெருங்குடியைச்

விழுப்புரம்-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.விக்கிரவாண்டியைச் சேர்ந்த தமிழ்மணி மனைவி கிரிஜா, 25; இவர், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தார். இதையறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் கிரிஜாவிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கூறுகையில், சென்னை பெருங்குடியைச் சேர்ந்த தனக்கு மேட்ரிமோனி மூலம் தமிழ்மணி, 33; என்பவர் அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டோம்.பின், இருவரும் விக்கிரவாண்டியில் வாடகை வீட்டில் 6 மாதம் வாழ்ந்து வந்தோம். தற்போது 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம்.இதற்கிடையே என் மீது சந்தேப்பட்டு, கருவை கலைக்குமாறு தமிழ்மணி கூறினார். என் மாமியார் சாந்தியும், என்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.இது குறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையம், எஸ்.பி., அலுவலகம், விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.இதையடுத்து, கிரிஜாவிடம் போலீசார், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X