பொது செய்தி

தமிழ்நாடு

'இது காந்தி வச்ச மரமுங்க!' பாதுகாக்கும் கிராம மக்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கிராமத்துக்கு காந்தி வந்த போது நட்டுச் சென்ற மரத்தை, அந்த ஊர் மக்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்த போது, காந்தி தன் அகிம்சா கொள்கைகளை, நாடு முழுக்க பயணித்து பிரசாரம் செய்து, போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். அப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கும் வருகை தந்துள்ளார்.கடந்த, 1927ம் ஆண்டு
 'இது காந்தி வச்ச மரமுங்க!' பாதுகாக்கும் கிராம மக்கள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே கிராமத்துக்கு காந்தி வந்த போது நட்டுச் சென்ற மரத்தை, அந்த ஊர் மக்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்த போது, காந்தி தன் அகிம்சா கொள்கைகளை, நாடு முழுக்க பயணித்து பிரசாரம் செய்து, போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வந்தார். அப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கும் வருகை தந்துள்ளார்.கடந்த, 1927ம் ஆண்டு அக்டோபர் மாதம், 18ம் தேதி பொள்ளாச்சி நகரில் பொதுமக்களிடையே பிரசாரம் செய்து விட்டு, மறுநாள் திரும்பிச் செல்லும் வழியில், உடுமலை ரோட்டை அடுத்துள்ள கோமங்கலம்புதுார் கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது, பொது இடத்தில் ஒரு மரக்கன்றை நட்டுள்ளார்.அந்த மரக்கன்றை, மகாத்மா காந்தியின் நினைவாக, அந்த ஊர் மக்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஊரின் பெருமை மிகு அடையாளமாக கருதுகின்றனர். மரத்துக்கு சலவைக்கற்களால் மேடை அமைத்து, சுற்றிலும் காந்தியின் பொன்மொழிகளை பொறித்து வைத்துள்ளனர்.காந்தி ஜெயந்தியான இன்று, மரத்தை கவுரவித்து, தங்கள் ஊருக்கு காந்தி வந்து சென்ற நினைவுகளை பெரியவர்கள், இளைஞர்களிடம் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்வர்.மேலும், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட சுதந்திர இந்தியாவின் முக்கிய நாட்களிலும் காந்தி வைத்த மரத்துக்கு மரியாதைங செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X