சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
வானுார்-வானுார் அருகே ஆவணமின்றி பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட 168 சில்வர் துாக்கு வாலிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்வானுார் ஒன்றியத்தில் பறக்கும் படை தாசில்தார் வேலாயுதம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற

வானுார்-வானுார் அருகே ஆவணமின்றி பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட 168 சில்வர் துாக்கு வாலிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்வானுார் ஒன்றியத்தில் பறக்கும் படை தாசில்தார் வேலாயுதம் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மொரட்டாண்டி டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்சில் சோதனை செய்தனர். அதில், 168 சில்வர் துாக்கு வாலிகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.இது குறித்து பஸ் கண்டக்டரிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், புதுச்சேரி பஸ் நிலையத்தில் ஒருவர், இந்த சில்வர் பாத்திரங்களை பஸ்சில் ஏற்றி வைத்து விட்டு, கிளியனுார் பகுதியில் இறக்கி விடுமாறு கூறி விட்டுச் சென்றதாக தெரிவித்தார்.இந்த சில்வர் துாக்கு வாலிகளின் மதிப்பு 23 ஆயிரம் ரூபாயாகும். இந்த பாத்திரங்களுக்கு போதிய ஆவணம் இல்லாததாலும், யாரும் உரிமை கோர வராததாலும், பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X