நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள தொழில் திட்ட குழு; இந்தியா- அமெரிக்கா ஒப்புதல் | Dinamalar

நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள தொழில் திட்ட குழு; இந்தியா- அமெரிக்கா ஒப்புதல்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி : இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் சார்ந்த தொழில்களில் நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான கொள்கைகளை வகுக்க, செயல் திட்ட குழு அமைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.டில்லியில் ஐந்து நாட்கள் நடந்த இந்திய - அமெரிக்க தொழில் பாதுகாப்பு ஒப்பந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

புதுடில்லி : இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவம் சார்ந்த தொழில்களில் நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பான கொள்கைகளை வகுக்க, செயல் திட்ட குழு அமைப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.



latest tamil news


டில்லியில் ஐந்து நாட்கள் நடந்த இந்திய - அமெரிக்க தொழில் பாதுகாப்பு ஒப்பந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ராணுவத் துறை சார்ந்த தொழில்களில் மிக முக்கியமான தொழில்நுட்பங்கள், அமெரிக்கா - இந்தியா இடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.


latest tamil news


இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ தொழில் சார்ந்த அதி நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, செயல் திட்டக் குழு அமைக்க மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு அவ்வப்போது கூடி, ராணுவ தொழில் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கைகளையும், அதற்கான வழிமுறைகளையும் உருவாக்கும். இக்குழுவை உருவாக்கி, செயல்படுத்த இந்தியா, அமெரிக்கா சார்பில் அனுராக் பாஜ்பாய், டேவிட் பால் பக்நட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X