சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: எட்டு பேர் மீது வழக்கு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் கைப்பற்றிய வழக்கில், பணியில் இருந்த, 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாசினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில்,

ஊட்டி:ஊட்டியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் கைப்பற்றிய வழக்கில், பணியில் இருந்த, 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாசினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத 78ஆயிரத்து 495 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, பணியில் இருந்த துணைப்பதிவாளர் செந்தில்குமார், இளநிலை உதவியாளர் சந்திரன், தற்காலிக ஊழியர்கள் கருப்புசாமி, குமார், செந்தில்குமார், ரமேஷ், ராஜ்குமார், சீனிவாசன் ஆகிய, 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'சார்-பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனை தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்தால் மட்டுமே, இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூற முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X