சுற்றுலா பயணிகளை கவரும் மையம்: அரிய வகை கவுலி மீன்கள் வளர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை கவரும் மையம்: அரிய வகை கவுலி மீன்கள் வளர்ப்பு

Added : அக் 02, 2021
Share
கூடலுார்;கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், புதிதாக திறக்கப்பட்டுள்ள நன்னீர் மீனகம், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலுார், நாடுகாணி சூழல் சுற்றுலா மையம், கொரோனா தொற்று காரணமாக ஏப்., மாதம் மூடப்பட்டது. அரசின் உத்தரவை தொடர்ந்து, திறக்கப்பட்டது. உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.இங்கு, 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக
 சுற்றுலா பயணிகளை கவரும் மையம்: அரிய வகை கவுலி மீன்கள் வளர்ப்பு

கூடலுார்;கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், புதிதாக திறக்கப்பட்டுள்ள நன்னீர் மீனகம், சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலுார், நாடுகாணி சூழல் சுற்றுலா மையம், கொரோனா தொற்று காரணமாக ஏப்., மாதம் மூடப்பட்டது. அரசின் உத்தரவை தொடர்ந்து, திறக்கப்பட்டது. உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.இங்கு, 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நன்னீர் மீனகம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மீன்கள் குறித்து, வன ஊழியர்கள் சுற்றுலா பயணிகளுக்கு விளக்குகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'இப்பகுதியில், அழிவின் பிடியில் உள்ள ஆற்று, நன்னீர் மீன்களை பாதுகாக்கவும், மீன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இங்கு நன்னீர் மீனகம் அமைக்கப்பட்டுள்ளது, இங்கு நாம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத, கூடலுாரில் நீர் நிலைகளில் மட்டுமே காணப்படும் கவுலி மீன்கள் பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X